Last Updated:
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தோனேசிய வீராங்கனை ஜேனிஸ் சாம்பியன் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் ஒற்றையர் இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 82-வது இடத்தில் இருக்கும் இந்தோனேசிய வீராங்கனை ஜேனிஸூம் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிரெலியும் மோதினர்.
இதில், 6க்கு 4, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பிரெலியை வீழ்த்தி இந்தோனேசிய வீராங்கனை ஜேனிஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று கண்டுகளித்ததுடன் பரிசு வழங்கி பாராட்டினார்…
November 02, 2025 10:25 PM IST


