Last Updated:
பிரதமர் மோடி, அவமதிப்புக்கென தனித் துறையை உருவாக்கலாம் என காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் பிகாரை அவமதிப்பதாகக் கூறும் பிரதமர் மோடி, அவமதிப்புக்கென தனித் துறையை உருவாக்கலாம் என காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
பிகாரின் சகர்ஷா மாவட்டத்தில் உள்ள சோனாபர்ஷாவில் பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஊழல் மற்றும் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை எனக் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளில் பிகார் மாநிலத்திற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் நிதிஷ்குமாரை இயக்குவதாகவும் அவர் விமர்சித்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் பிகாரில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, பாலங்கள் என எதையும் கட்டவில்லை என்று குற்றஞ்சாட்டிய பிரியங்கா காந்தி, அனைத்து எதிர்க்கட்சிகளும் பிகாரை அவமதிப்பதாகக் கூறும் பிரதமர் மோடி, அவமதிப்புக்கென தனித் துறையை உருவாக்கலாம் என விமர்சித்தார்.
November 03, 2025 10:21 PM IST
அவமதிப்புக்கு தனித் துறையை உருவாக்கலாம்… பிரதமர் மோடி விமர்சனத்திற்கு பிரியங்கா காந்தி பதில்


