பாடசாலை நேரத்தை அரை மணி நேரம் நீடிக்கும் முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு கருத்துகள் வெளிப்படுவது சாதாரணமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் முழுவதும் நாங்கள் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடினோம். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுடனும் உரையாடினோம். அதன் விளைவாகவே பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமைச்சு இது குறித்து ஒரு சுற்றறிக்கையும் வெளியிட்டது. இதை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்து ஒரு மாதிரி கால அட்டவணை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். R

