ஆகையால், தங்கத்தின் மீது முதலீடு செய்வது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பணவீக்கத்திற்கு எதிராக தங்கம் பாதுகாப்பான புகலிடமாக இருக்கிறது. மேலும், தங்கத்தை நீண்ட கால முதலீடாக கருதுவது ஓய்வு அல்லது அவசர காலங்களில் நல்ல வருமானத்தை பெறலாம். தங்க விலையில் பொதுவாக ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். ஆகையால், தற்போதைய விலையை மட்டும் பார்க்காமல், நீண்டகால கண்ணோட்டத்துடன் முதலீடு செய்தால் நல்ல வருமானத்தை பெற முடியும். 2050-ம் ஆண்டுக்குள், ஒரு கிலோ தங்கத்தின் விலை குறைந்தது ரூ.30 கோடியாகவும், அதிகபட்சம் ரூ.50 கோடியாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது வெறும் மதிப்பீடு மட்டுமே.


