Last Updated:
இந்த தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து வெள்ளியன்று நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இன்று 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டாய்னிஸ் 64 ரன்களும் குவித்தனர்.
மேத்யூ ஷார்ட் 26 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா 25 ரன்களும், சுப்மன் கில் 15 ரன்களும் எடுத்து சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும், திலக் வர்மா 29 ரன்களும் அக்சர் படேல் 17 ரன்களும் எடுத்தனர்.
இந்த தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. அடுத்த போட்டி 6ஆம் தேதியும், கடைசி போட்டி 8 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
November 02, 2025 5:26 PM IST


