சிங்கப்பூர்: MRT ரயிலின் வெளியே இரண்டு நபர்கள் படுத்து இருப்பதைக் காட்டும் காணொளி சிங்கப்பூர் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில் ஏற்கனவே ஒருவர் ரயிலுக்கு வெளியே பிளாட்பாரத்தில் படுத்த நிலையில் கிடப்பதையும், மற்றொருவரை மூவர் வெளியே இழுத்துப் போடுவதையும் காணொளியில் காணமுடிந்தது.
இணைய வாசிகள் மத்தியில் அங்கு என்ன நடக்கிறது? என்ற பெரும் குழப்பத்தை இந்த காணொளி ஏற்படுத்தியுள்ளது.
அக்.30 அன்று Singapore Incidents என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியான இந்த காணொளி தீயாக பரவியது.
21 வினாடிகள் கொண்ட இந்த காணொளி, ரயில் பெட்டியின் உள்ளே இருந்து தொடங்குகிறது, அதில் ஒருவர் பிளாட்பாரத்தில் மட்டமல்லாக்க படுத்திருப்பதைக் காட்டுகிறது, சிறிது நேரம் கழித்து ரயிலின் உள்ளே இருந்து இன்னொருவரை மூவர் இழுத்து வெளியே போடுகின்றனர்.
இது குறித்து காணொளி கமன்ட் பிரிவில் இணையவாசிகள் பல கருத்துக்களை தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் சட்டவிரோதமான மின்-சிகரெட்டை பயன்படுத்தியதால் இவர்கள் கீழே சரிந்திருக்கலாம் என்று சில பயனர்கள் கூறினர்.
சிலர் அவர்கள் மது போதையில் இவ்வாறு நடந்துகொள்வதாக யூகித்தனர்.
மேலும் சிலர் இது வெறும் நடிப்பு என்று நினைத்தனர்.
மேலும் இது “அவசரகால பயிற்சி,” என்றும் “PRANK” என்றும் பல கலவையான கருத்துக்கள் எழுந்தன.
சிங்கப்பூர் ஆற்றில் மிதந்த 34 வயதுடைய ஆடவர் உடல் – மீட்கப்பட்டு விசாரணை

