Last Updated:
ஐசிசி 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.
ஐசிசி 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்றில் சற்று தடுமாறிய இந்திய அணி, அரையிறுதியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்த சாதனை வெற்றியுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி, முதல்முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவி மும்பையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா பெற்ற தோல்விக்கு இறுதிப் போட்டியில் பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள தென் ஆப்பிரிக்காவும் கோப்பையை வெல்ல போராடும் என்பதில் ஐயமில்லை. எனினும், இன்று போட்டி நடைபெறும் நவி மும்பை மைதானத்தில், ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து அதீத பலத்தை இந்திய அணி வெளிப்படுத்தியுள்ளதால், இன்றைய போட்டியிலும் அதே அதிரடி தொடருமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணி இந்த முறை மகுடம் சூடுமா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்
November 02, 2025 6:35 AM IST


