சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவற்குழி பகுதியில், 25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே 36 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (a)


