தீபாவளி அன்று தங்கம் வாங்குவது அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வீட்டிற்குள் வரவழைக்கும் என்பது பலருடைய நம்பிக்கை. இதன் காரணமாக பலர் தீபாவளியன்று தங்கம் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். அக்டோபர் 10 நிலவரப்படி 10 கிராம் தங்கத்தின் விலை 1,13,400 ரூபாய் ஆகும். இதனை கடந்த ஆண்டு ஒப்பிடும்போது 47 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. எனவே, இந்த தீபாவளிக்கு நீங்கள் தங்கம் வாங்கும்போது சரியான முடிவுகளை எடுக்க உதவும் சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


