Last Updated:
BJP by-election candidates | பாஜக ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒடிசா, தெலுங்கானா இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒடிசா மாற்றும் தெலங்கானா மாநில இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை அறிவித்ததுள்ளது.
பிகார் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீரிலும் ஒடிஸா, ஜார்க்கண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், மிஸோரம் ஆகிய 6 மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2025-க்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (அக்டோபர் 15) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. பாஜக ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒடிசா, தெலுங்கானா இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். இதில் ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில் பட்காம் மற்றும் நாக்ரொடா ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலகப் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் ஜம்மு காஷ்மீரில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பட்காம் (Budgam – 27) சட்டமன்றத் தொகுதிக்கு ஸ்ரீ ஆகா சையத் மோஷினும், நாகரோட்டா (Nagrota – 77) சட்டமன்றத் தொகுதிக்கு சுஸ்ரீ தேவயானி ராணாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் (ST) தனித் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். காட்சிலா (Ghatsila) சட்டமன்றத் தொகுதிக்குஸ்ரீ பாபுலால் சோரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல ஒடிசா மாநிலத்தில் ஒரு பொதுத் தொகுதிக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நூவபடா (Nuapada) சட்டமன்றத்தொகுதிக்கு ஸ்ரீ ஜெய் தோலகியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
October 15, 2025 12:30 PM IST


