ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் என ஐவரே யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு ஆணும், 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு பெண்ணும், 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (a)


