Last Updated:
பிகார் தேர்தலில் நல்லாட்சி எதிர்காலம் குறித்து அமித்ஷா உரை, NDA வளர்ச்சி திட்டங்கள், விவசாயி நலன், சர்க்கரை ஆலை மீட்பு, RJD வெற்றிக்கு கோபால்கஞ்ச் மக்கள் எதிர்ப்பு.
பிகார் சட்டமன்ற தேர்தல் நல்லாட்சிக்கும், காட்டு ராஜ்ஜியத்திற்கும் இடையே தான் போட்டி என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.
பிகார் மாநிலம் கோபால்கஞ்சில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் மத்திய அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது. கடுமையான வானிலை காரணமாக போட்னாவில் இருந்து கோபால்கஞ்ச்சிற்கு தன்னால் வர முடியவில்லை என்று கூறினார். மேலும் 2002 முதல் கோபால்கஞ்ச் மக்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்தை வெற்றிப்பெற வைக்கவில்லை என்றும், அந்த சாதனையை தொடர்வார்கள் என்று நம்புவதாகவும் கூறினர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பீகாரில் மூடப்பட்ட அனைத்து சர்க்கரை ஆலைகளையும் மீண்டும் தொடங்குவோம் என்றும் விவசாயிகளின் செழிப்பை உறுதி செய்வோம் என்றும் அமித்ஷா பேசினார். அமித்ஷா கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக அதிகமான மக்கள் கூடியுள்ளீர்கள். தாமதத்திற்கு நான் மன்னிப்பு கோருகிறேன். மோசமான வானிலை காரணமாக, பாட்னாவிலிருந்து கோபால்கஞ்ச் பயணிக்க எனக்கு அனுமதி இல்லை. எனவே காணொளி வாயிலாக பேசுகிறேன்.
இந்தத் தேர்தல் பீகாரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். காட்டு ராஜ்ஜியத்தை திணித்தவர்களின் கைகளில் பீகார் இருக்குமா? அல்லது பீகாரை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற நிதிஷ் மற்றும் மோடியின் கைகளில் அது இருக்குமா? என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கும். இந்தத் தேர்தல் நல்லாட்சிக்கும், காட்டு ராஜ்ஜியத்திற்கும் இடையிலான போட்டி.
கடந்த 2002 முதல் கோபால்கஞ்ச் மக்கள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெற ஒருபோதும் அனுமதித்ததில்லை. இந்த முறையும் கோபால்கஞ்ச் மக்கள் இந்த சாதனையை தொடர்வார்கள் என்று நான் நம்புகிறேன். நேற்று எங்கள் கூட்டணியின் அறிக்கை வெளியிடப்பட்டது. பீகாரின் வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்களை அறிவித்தோம்.
ஆனால் விவசாயிகளுக்கும், பெண்களுக்குமான வாக்குறுதியை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். சமீபத்தில், நிதிஷ் குமாரும் மோடியும் 14.1 மில்லியன் ஜீவிகா தீதிகளின் கணக்குகளில் 10,000 ரூபாய் டெபாசிட் செய்தனர். இதம் மூலம் ஒவ்வொரு ஜீவிகா சகோதரிகளும் பல்வேறு வழிகளில் தங்கள் வங்கிக் கணக்குகளில் 2 லட்சம் வரை தொகையை பெறுவார்கள்.
அடுத்ததாக பீகாரில் உள்ள 2.7 மில்லியன் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 வழங்கப்படுகிறது. மீண்டும், NDA அரசு அமைத்த பிறகு, கூடுதலாக 3,000 உடன் மொத்தம் 9,000 கிடைக்கும். மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை மீண்டும் தொடங்க நரேந்திர மோடி குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ரிகா சர்க்கரை ஆலை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மூன்று சர்க்கரை ஆலைகள், ஒரு எத்தனால் ஆலை, ஒரு அரிசி மற்றும் மாவு ஆலை மற்றும் ஒரு பால் ஆலை ஆகியவற்றை மீண்டும் தொடங்க பணியாற்றியுள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பீகாரில் மூடப்பட்ட அனைத்து சர்க்கரை ஆலைகளையும் மீண்டும் தொடங்குவோம், விவசாயிகளின் செழிப்பை உறுதி செய்வோம்” என பேசினார்.
November 01, 2025 5:21 PM IST
“நல்லாட்சிக்கும் – காட்டு ராஜ்ஜியத்துக்கும் இடையிலான போட்டி தான் இந்த தேர்தல்” – அமித்ஷா பேச்சு


