Last Updated:
PAN Card Misuse | உங்களுடைய PAN கார்டு நம்பரை பாதுகாப்பற்ற வெப்சைட்டுகள், அப்ளிகேஷன் அல்லது ஃபார்வேர்டுகளில் ஷேர் செய்ய வேண்டாம்.
கடன் மோசடிகள் மற்றும் அடையாளத் திருட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், உங்களுடைய PAN கார்டைப் பயன்படுத்தி யாராவது கடன் வாங்கி இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்வது என்பது முன் எப்போதையும்விட முக்கியமானதாக அமைகிறது. உங்களுடைய PAN கார்டு என்பது உங்களது கடன் வரலாற்றோடு நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளதால், உங்களுடைய பெயரில் வாங்கப்பட்டுள்ள அனைத்து விதமான கடன்களும் உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் காண்பிக்கப்படும். மேலும், இதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம். ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், உங்களுடைய PAN கார்டை யாராவது தவறாகப் பயன்படுத்தி இருந்தால் அதனை உங்களால் தெரிந்துகொள்ள முடியும். அதற்கான சில வழிகளை இப்போது பார்க்கலாம்.
உங்களுடைய பெயரில் ஏதேனும் கடன் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கான மிகவும் எளிமையான வழி இதுதான். உங்களுடைய PAN கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் சம்பந்தப்பட்ட பதிவேடுகளை CIBIL, Experian, Equifax மற்றும் CRIF High Mark போன்ற கிரெடிட் பியூரோக்கள் பராமரித்து வருகிறார்கள். உங்களுடைய PAN கார்டு மற்றும் மொபைல் நம்பரைச் சரிபார்ப்பதன் மூலமாக இலவச ஆண்டு வாரியான கிரெடிட் ரிப்போர்ட்டை உங்களால் பெற முடியும். அதனைப் பார்ப்பதன் மூலமாக நீங்கள் வாங்காத அக்கவுண்டுகள் அல்லது கடன்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
உங்களுடைய ரிப்போர்ட்டைக் கவனிக்கும்போது நீங்கள் விண்ணப்பிக்காத கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகள், தவறான அக்கவுண்ட் நம்பர்கள், பரிச்சயமில்லாத கடன் வழங்குனருடைய பெயர்கள் அல்லது நீங்கள் அங்கீகாரம் கொடுக்காத புதிய ஹார்ட் என்குயரிகள் போன்றவை இருக்கிறதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை அவை இருந்தால் உங்களுடைய PAN கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதை இது குறிக்கிறது.
நீங்கள் வாங்காத ஒரு கடன் இருப்பதை கண்டுபிடிக்கும் பட்சத்தில், அது குறித்து கடன் வழங்குனரிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டும் மற்றும் கிரெடிட் பியூரோ மூலமாக புகார் ஒன்றை பதிவு செய்யலாம். இதற்கு நீங்கள் உங்களுடைய அடையாளத்திற்கான நிரூபணம், கடன் சம்பந்தப்பட்ட விவரங்கள் மற்றும் கையெழுத்திடப்பட்ட உறுதிமொழி ஆகியவற்றை வழங்க வேண்டும். கூடுதலாக உள்ளூரில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் செல்லில் தகுந்த ஆதாரங்களோடு ஒரு புகாரைத் தாக்கல் செய்யுங்கள்.
உங்களுடைய PAN கார்டு நம்பரை பாதுகாப்பற்ற வெப்சைட்டுகள், அப்ளிகேஷன் அல்லது ஃபார்வேர்டுகளில் ஷேர் செய்ய வேண்டாம். பொதுவெளியில் உங்களுடைய PAN கார்டு நம்பரை ஒருபோதும் வெளியிடாதீர்கள். ஒருவேளை உங்களுடைய PAN கார்டு தொலைந்துவிட்டால் அதனை மீண்டும் பிரிண்ட் செய்வதற்கு விண்ணப்பிக்கவும் மற்றும் அடுத்த ஒரு சில மாதங்களுக்கு உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை நீங்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். உங்களுடைய பொருளாதார அக்கவுண்டுகளுக்கு தரமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துங்கள். உங்களுடைய PAN கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு SMS அல்லது இமெயில் அலர்ட்டுகளை எனேபிள் செய்துகொள்ளவும்.
இது மாதிரியான மோசடி கடன்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரையும், உங்கள் மீதான பொருளாதார நன்மதிப்பையும் பாதிக்கலாம். எனவே உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை அடிக்கடி கண்காணிப்பதன் மூலமாக இந்த விஷயங்களை உங்களால் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும். உங்களுடைய PAN கார்டை வங்கி PIN நம்பர் அல்லது ஆதார் நம்பரைப்போல நீங்கள் எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்.
October 13, 2025 9:26 AM IST


