• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றிப் பேசும் அமைப்பே ஆரிய சமாஜம்” – பிரதமர் மோடி | Arya Samaj has always spoken fearlessly about Indianness, Swami Dayanand Saraswati was a visionary: PM Modi

GenevaTimes by GenevaTimes
October 31, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
“இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றிப் பேசும் அமைப்பே ஆரிய சமாஜம்” – பிரதமர் மோடி | Arya Samaj has always spoken fearlessly about Indianness, Swami Dayanand Saraswati was a visionary: PM Modi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றி பேசும் அமைப்பு ஆரிய சமாஜம் என்றும், அதன் நிறுவனரான தயானந்த சரஸ்வதி பெண்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆரிய சமாஜத்தின் 150-ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட 150 ஆண்டுகள் என்பது சமூகத்தின் ஒரு பிரிவினரோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மாறாக, அது முழு நாட்டின் வேத அடையாளத்துடன் தொடர்புடையது. ஆரிய சமாஜம் இந்திய மதிப்புகளைப் பற்றி அச்சமின்றிப் பேசிய ஒரு அமைப்பு. சுவாமி தயானந்த சரஸ்வதி தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தலைவர்.

அந்தக் காலத்தில் நிலவிய தீமைகளை ஒழித்து பெண்களுக்கு அதிகாரம் அளித்ததில் சுவாமி தயானந்த சரஸ்வதி பெரும் பங்கு வகித்தவர். இன்று நமது மகள்கள் போர் விமானங்களை ஓட்டுகிறார்கள். ட்ரோன்களை இயக்குகிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் பெண்கள் தலைமைப் பதவிகளை வகித்து வருகிறார்கள். இந்த வார தொடக்கத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளையும், ஆர்ய சமாஜத்தின் 150வது ஆண்டையும் குறிக்கும் வகையில் நினைவு நாணயங்களை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி

கடந்த ஆண்டு குஜராத்தில் தயானந்த சரஸ்வதியின் பிறந்த இடத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்பாக டெல்லியில் அவரது 200வது பிறந்த நாள் விழாவை தொடங்கிவைக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. 200வது பிறந்த நாள் விழாவை, இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான அறிவுசார் யாகமாக நடத்த நாங்கள் அனைவரும் முடிவு செய்தோம். இந்த அறிவுசார் யாகம், இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சுவாமி தயானந்த சரஸ்வதியின் பாதங்களில் வணங்கி அவருக்கு மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன்” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளையும், ஆர்ய சமாஜத்தின் 150-வது ஆண்டையும் குறிக்கும் வகையில் நினைவு நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.



Read More

Previous Post

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் செயல்படும் பெரும் போதைப்பொருள் வலையமைப்பு

Next Post

2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி. – ஹேசில்வுட் அபாரம் | hazlewood helps australia beats team india in second t20 match

Next Post
2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி. – ஹேசில்வுட் அபாரம் | hazlewood helps australia beats team india in second t20 match

2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி. - ஹேசில்வுட் அபாரம் | hazlewood helps australia beats team india in second t20 match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin