• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெற மனைவியைக் கொன்ற கணவர்…! சம்பவத்தின் பின்னணி என்ன…? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 31, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெற மனைவியைக் கொன்ற கணவர்…! சம்பவத்தின் பின்னணி என்ன…? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 15, 2025 7:48 PM IST

ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகையை வசூலிக்க தனது மனைவியைக் கொன்று, அதை சாலை விபத்துபோல சித்தரித்ததாக கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rapid Read
News18
News18

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகையை வசூலிக்க தனது மனைவியைக் கொன்று, அதை சாலை விபத்துபோல சித்தரித்ததாக கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அக்டோபர் 9ஆம் தேதி ஹசாரிபாக்கில் நடந்துள்ளது. 

23 வயதான சேவந்தி குமாரி மற்றும் 30 வயதான முகேஷ் குமார் ஆகியோர் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு சேவந்தியின் பெயரில் காப்பீடு எடுக்கப்பட்டது. இந்தப் பணத்தைப் பெறுவதற்காக முகேஷ் தனது மனைவியைக் கொன்று, பின்னர் சேவந்தி ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டதாக மனைவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சேவந்தியின் தந்தை மகாவீர் மேத்தா இதை நம்பவில்லை, இதனையடுத்து போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது மருமகன் மற்றும் மகள் பெயரில் ரூ.15 லட்சத்திற்கான காப்பீட்டுக் கொள்கையை எடுத்துள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். மனைவியின் இறுதிச் சடங்கில் கணவர் கலந்து கொள்ளாததும் சந்தேகங்களை எழுப்பியது.

மகாவீர் மேத்தாவின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மருத்துவ பரிசோதனையில் சேவந்தியின் உடலில் மிகக் குறைந்த காயங்களே இருந்தன என்றும், அது சாலை விபத்து அல்ல என்றும் தெரியவந்தது. இது முகேஷ் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியது. தீவிர விசாரணையின்போது, காப்பீட்டுத் தொகையை வசூலிப்பதற்காக தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றதாக முகேஷ் ஒப்புக்கொண்டார். தனது மனைவியைக் கொன்ற பிறகு, முகேஷ் ஒரு போலியான விபத்தை உருவாக்கியதும் தெரியவந்துள்ளது.

முகேஷின் வாக்குமூலங்களில் இருந்த முரண்பாடுகளும், அவரது மனைவியின் மரணத்திற்குப் பிறகு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாததும் அவர் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி அஜித் குமார் விமல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முகேஷ் கைது செய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் மட்டும் பால் சேர்த்து தேநீர் தயாரிக்க என்ன காரணம் தெரியுமா…? பலருக்கு தெரியாத தகவல்…

தகவலின்படி, அக்டோபர் 9ஆம் தேதி இரவு, வயிற்று வலிக்காக தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, தலைக்கவசத்தால் அடித்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து பைக்கையும், தன்னையும் சேதப்படுத்திக் கொண்ட பிறகு, மனைவியின் உடலை சாலையில் விட்டுச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்தில் பைக்கிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், அந்த இளைஞரின் உடம்பில் காயங்கள் கூட சிறியவை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இதையும் படிங்க: அசைவ விருந்து… சர்ச்சையை தொடர்ந்து பள்ளி முதல்வர் இடைநீக்கம்…!

இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதன்முறை அல்ல. உத்தரப்பிரதேசத்திலும் இதைப்போன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. அதில், ரூ.50 கோடி மதிப்புள்ள காப்பீட்டு சலுகைகளைப் பெறுவதற்காக ஒரு நபர் தனது முதல் மனைவி, தந்தை மற்றும் தாயைக் கொன்றார். இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 15, 2025 7:48 PM IST

Read More

Previous Post

கெரோயின் போதைப்பொருளுடன் 4 பேர் கைது

Next Post

Ind vs Aus | 679 ரன்கள், 300+ சேஸிங்.. பல முக்கிய சாதனைகள் தகர்ப்பு

Next Post
Ind vs Aus | 679 ரன்கள், 300+ சேஸிங்.. பல முக்கிய சாதனைகள் தகர்ப்பு

Ind vs Aus | 679 ரன்கள், 300+ சேஸிங்.. பல முக்கிய சாதனைகள் தகர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin