Last Updated:
முன்னதாக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் இன்று 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் 12 பேர் அடங்கிய 2 ஆவது வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.
எதிர்த்தரப்பில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீண்டும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் பாஜக மொத்தம் 101 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி முதற்கட்டமாக 71 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று 12 பேர் அடங்கிய 2ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
October 15, 2025 8:03 PM IST


