Last Updated:
ஆஸ்திரேலியா அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகள் 82 ஒருநாள் மற்றும் ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் ரிலீஸ் ஆகிய விளையாடி இருக்கிறார்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த லீசா கேட்லி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்று விமன்ஸ் பிரிமியர் லீக் எனப்படும் மகளிருக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 2023 ஆம் ஆண்டிலிருந்து மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ நடத்துகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2023 மற்றும் 2025-ல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2026 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வருகின்றது. இந்த சூழலில் மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக 2 முறை உலக சாம்பியன் பட்டம் என்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த லீசா கேட்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி கூறுகையில், “மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கு மிகுந்த ஆவலுடன் லிசா கேட்லியை நாங்கள் வரவேற்கிறோம். தனது சிறப்பான ஆட்டத்தால் பல தலைமுறையை லீசா கேட்லி ஈர்த்துள்ளார்.
பல இளம் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இவர் முன்மாதிரியாக இருந்து வருகிறார். அவரது வருகை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும். அவரது பங்களிப்பால் மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் பல உச்சத்தை அடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து லிசா கேட்லீ கூறுகையில், மும்பை அணி எனக்கு மிகப் பெரிய கௌரவத்தை அளித்துள்ளது. மகளிர் பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பல சாதனைகளை ஏற்படுத்தி வலுவான அணியாக உள்ளது. வீராங்கனைகளையும் உறுப்பினர்களையும் நிர்வாகம் மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்வது என்னை ஈர்த்தது. திறமை மிக்க நபர்களுடன் நான் பணியாற்றுவதை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் என்று கூறியுள்ளார்.
September 25, 2025 5:01 PM IST


