Last Updated:
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சியான மகா கூட்டணி ஆகிய இரு பிரதான கூட்டணிகளுக்கும் இடையே கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது லாலு பிரசாத் யாதவின் முன்னாள் உதவியார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6, 2025 அன்றும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11, 2025 அன்றும் நடைபெற உள்ளது.
அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14, 2025 அன்று ஒரே நாளில் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலில் சுமார் 7.42 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய உள்ளனர். ஆட்சியை அமைக்க 122 இடங்கள் பெரும்பான்மை தேவை.
இந்தத் தேர்தல், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சியான மகா கூட்டணி ஆகிய இரு பிரதான கூட்டணிகளுக்கும் இடையே கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது. NDA கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) ஆகியவை முதன்மை கட்சிகளாக உள்ளன.
மறுபுறம், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார், இவருடன் காங்கிரஸ் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. மேலும், 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு முதன்முறையாக வீட்டு வாக்களிப்புச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட மோதலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளர் துலார் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
October 30, 2025 6:33 PM IST
லாலு பிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளர் சுட்டுக்கொலை.. பீகார் தேர்தல் பரப்புரையின்போது நடந்த பயங்கரம்


