ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ், டூப்ளசிஸ் உள்ளிட்ட t20 ஸ்பெசலிஸ்ட் ஆட்டக்காரர்களை உள்ளடக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடமான பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இதனால் அந்த அணியின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் பௌலிங் படு மோசமாக இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 262 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இன்னும் குறைந்த போட்டிகளே லீக் சுற்றில் மீதம் உள்ள நிலையில் ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பெங்களூர் அணியின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கருத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது- பெங்களூரு அணியின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. சர்வதேச அளவில் முன்னணி பௌலர்களாக இருக்கும் ரீஸ் டாப்ளே மற்றும் லாக்கி பெர்கூசனின் பவுலிங் விளாசப்பட்டுள்ளது.
பெங்களூர் அணி 11 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கலாம். விராட் கோலி 4 ஓவர்கள் பந்து வீசி இருந்தால் கூட இவ்வளவு அதிகமான ரன்களை எதிரணிக்கு கொடுத்திருக்க மாட்டார். என்னை பொறுத்த அளவில் விராட் கோலி நன்றாக வீசக்கூடியவர். சன்ரைசர்ஸ் அணியினர் சிக்சர்களை சர்வ சாதாரணமாக பறக்க விட்டனர்.
அதனை விராட் கோலி பார்த்து பரிதாபமாக நின்ற காட்சி எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த தொடர் தோல்விக்கு ஆர்சிபி அணியின் நிர்வாகம் தான் காரணம் என்று கூறுவேன் 17.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீனையும், 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அல்சாரி ஜோசப்பையும் ஆர்சிபி அணி பயன்படுத்தவில்லை.
அந்த அணி நிர்வாகம் ஏலத்தின் போது திட்டமின்றி செயல்பட்டு உள்ளது. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)