Last Updated:
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் மோதிய இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2 போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே தடுமாறினர்.
தொடக்க வீரர் பர்கான 4 ரன்களும், பகர் ஜமான் 13 ரன்களும் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன சல்மான் அகா 23 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஸ்கோரை சற்று உயர்த்தினார்.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.
September 25, 2025 10:03 PM IST


