சரி, தங்கத்தின் விலைதான் இப்படி எகிறுகிறது என்றால், விட்டேனா பார் என இந்த பக்கம் வெள்ளியின் விலையும் விறுவிறுவென கூடிக் கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் வெள்ளி ஒரு கிராம் 103 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர், அதன் விலை ஏறி இறங்க, 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிராம் வெள்ளி 98 ரூபாய் ஆனது.


