Last Updated:
பிகார் தேர்தலில் ராகுல் காந்தி, பிரதமர் மோடி வாக்குக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என விமர்சித்து, நிதிஷ்குமாரை பாஜக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவதாக குற்றம்சாட்டினார்.
பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் பாஜக இயக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிகாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தனது பரப்புரையைத் தொடங்கினார். அதன்படி, முஷாபர்பூரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சமூக நீதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை எனக் குற்றம்சாட்டினார். அம்பேத்கரின் அரசியல்சாசனத்தை, நரேந்திர மோடியும், ஆர்.எஸ்.எஸ்.,ஸும் தாக்குவதாக கூறிய ராகுல் காந்தி, அரசியல்சாசனத்தை யாராலும் அழிக்க முடியாது என்று சூளுரைத்தார்.
வாக்குக்காக பிரதமர் மோடி எதை வேண்டுமானாலும் செய்வார் என்றும், ஆனால் தேர்தலுக்குப் பிறகு அவரை பார்க்க முடியாது எனவும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
இதேபோல் தர்பங்காவில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மகாகத்பந்தனின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி. மகாகத்பந்தன் அரசாங்கம் அனைத்து சாதிக்கும், அனைத்து மதத்திற்குமான அரசாக இருக்கும். யாமுனை நதி மிகவும் தூய்மையற்றத்தாக இருக்கிறது. அதை நீங்கள் குடித்தால், ஒன்று நோய் வரும் அல்லது மரணிக்க வேண்டியதும் வரும். யாரும் அதில் இறங்க முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால், மோடி அங்கு ஒரு குளத்தை உருவாக்கி, அதில் தூய்மையான நீரை பைப் மூலம் அங்கு கொண்டுவந்து அதில் நீராட இருக்கிறார்” என பேசியுள்ளார்.
October 29, 2025 10:06 PM IST


