• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பழைய கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடப் போறீங்களா? அதற்கு முன்பு இந்த விஷயங்களை மறக்காதீங்க! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பழைய கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடப் போறீங்களா? அதற்கு முன்பு இந்த விஷயங்களை மறக்காதீங்க! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 29, 2025 4:08 PM IST

கிரெடிட் கார்டு மூலமாக உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் அந்த கார்டுக்காக நீங்கள் செலவு செய்யும் தொகையை விட குறைவாக இருந்தால் தாராளமாக அந்த கார்டை நீங்கள் மூடலாம்.

பழைய கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடப் போறீங்களா?
பழைய கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடப் போறீங்களா?

உங்களுடைய கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடும்போது இரண்டு விஷயங்களால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு ஒரு குறுகிய கால பாதிப்பு ஏற்படலாம். முதலில் உங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கிரெடிட் வரம்பு குறைகிறது. இதனால் உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதம் அதிகமாகலாம். இரண்டாவதாக, ஒருவேளை நீங்கள் மூட நினைக்கும் கிரெடிட் கார்டு அக்கவுண்ட் பழையதாக இருக்கும் பட்சத்தில் அந்த கார்டு சம்பந்தப்பட்ட வரலாறுகள் அழிக்கப்படுகிறது. எனவே கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடுவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

பயனீட்டு விகிதத்தைச் சரி செய்வது: தற்போது நீங்கள் மூட நினைக்கும் கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டில் 30,000 ரூபாய் வரம்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம். மொத்தமாக 3 லட்ச ரூபாய் வரம்பு எனும் போது உங்களுக்கு 10 சதவீத இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான கார்டை மூடும்போது அது 15% ஆக மாறுகிறது. எல்லா நேரங்களிலும் உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதம் 30 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கடன் வரலாறு

எப்போதாவது உங்களுடைய கார்டைப் பயன்படுத்தி இருந்தால் கூட அது பழைய கார்டு எனும் போது ஆண்டுவாரியான கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக மட்டுமே கார்டை நீங்கள் இப்போது மூடப் போகிறீர்கள் என்றால் கட்டணம் இல்லாத ஒரு ப்ராடக்ட்டை வழங்குமாறு உங்களுடைய கிரெடிட் கார்டு வழங்குனரிடம் நீங்கள் கேட்கலாம். நீங்கள் கிரெடிட் கார்டு திறந்த தேதி மற்றும் அந்த அக்கவுண்ட்டின் வயது இதன் மூலமாக மாறாமல் அப்படியே வைக்கப்படும்.

கிரெடிட் வரம்பை டிரான்ஸ்ஃபர் செய்தல்

அதே வங்கியில் உங்களிடம் பல்வேறு கார்டுகள் இருக்கும் பட்சத்தில், கார்டை மூடுவதற்கு முன்பு பழைய கார்டு கிரெடிட் லிமிட்டை வேறு ஒரு கார்டுக்கு டிரான்ஸ்ஃபர் செய்வதை உறுதிப்படுத்துங்கள். இவ்வாறு உங்களுக்கு இருந்த மொத்த கிரெடிட் வரம்பில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

கடன் விண்ணப்பங்கள்

ஒருவேளை நீங்கள் வேறுவிதமான பிரீமியம் கார்டு, கார் லோன் அல்லது அடமானங்களுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் இந்த சமயத்தில் நீங்கள் உங்களுடைய அனைத்து அக்கவுண்டுகளையும் குறைந்தபட்சம் 60 முதல் 90 நாட்களுக்கு நிலையாக வைத்திருக்க வேண்டும். புதிய கடன் தொகையைப் பெற்ற பிறகு உங்களுடைய அக்கவுண்ட்டை மூடலாம்.

கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடுவது எப்போது புத்திசாலித்தனமாக கருதப்படுகிறது?

கிரெடிட் கார்டு மூலமாக உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் அந்த கார்டுக்காக நீங்கள் செலவு செய்யும் தொகையை விட குறைவாக இருந்தால் தாராளமாக அந்த கார்டை நீங்கள் மூடலாம். மேலும் ஆண்டுவாரியான கட்டணத்தைத் தவிர்க்க நினைத்து, அது சம்பந்தமாக உங்களுடைய கிரெடிட் கார்டு வழங்குனரிடம் கார்டை டவுன்கிரேட் செய்து தருமாறு கேட்டு, அவர்கள் அதற்கு மறுத்திருந்தாலும் நீங்கள் உங்களுடைய அக்கவுண்ட்டை மூடிவிடலாம். எனவே உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதம் மற்றும் அதே சமயத்தில் உங்களுடைய பழைய கிரெடிட் வரலாற்றைப் பராமரிக்கும் வகையில் உங்களுடைய முடிவு இருக்க வேண்டும். இதன் மூலமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 29, 2025 4:08 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

பழைய கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடப் போறீங்களா? அதற்கு முன்பு இந்த விஷயங்களை மறக்காதீங்க!

Read More

Previous Post

பிரபல விளையாட்டு வீராங்கனையின் வீட்டில் திருட்டு.. போலீசார் தீவிர விசாரணை | விளையாட்டு

Next Post

தேசிய குழந்தைகள் ஆணையத்தை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்கிறார் அசலினா – Malaysiakini

Next Post
தேசிய குழந்தைகள் ஆணையத்தை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்கிறார் அசலினா – Malaysiakini

தேசிய குழந்தைகள் ஆணையத்தை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்கிறார் அசலினா – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin