Last Updated:
திருடப்பட்ட பொருட்களின் விவரங்கள் மற்றும் சேதத்தின் முழு அளவு குறித்து இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
பிரபல விளையாட்டு வீராங்கனை மேரி கோமின் வீட்டில் திருட்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் மிகவும் கொண்டாடப்படும் விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக மேரி கோம் உள்ளார். இவர் இவர் ஆறு முறை (2002, 2005, 2006, 2008, 2010, மற்றும் 2018) உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஒரே பெண் குத்துச்சண்டை வீரர் ஆவார்.
2012 லண்டன் ஒலிம்பிக்கில், ஃப்ளைவெயிட் (Flyweight) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் இவரே. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
மேரி கோமிற்கு டெல்லியில் வீடு உள்ளது. இதற்கிடையே அவர் மாரத்தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மேகாலயாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இன்றைக்கு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
September 27, 2025 8:34 PM IST


