மேலும் அவர், “இவை வைரங்களால் அல்ல, ‘ஐம்பொன்’ எனப்படும் பாரம்பரிய உலோகக் கலவையால் உருவாக்கப்படுகின்றன. செம்பு, தங்கம், வெள்ளி, இரும்பு, துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களின் சேர்க்கைதான் ஐம்பொன்னின் தனித்துவமாகும். இதுவே, அவற்றின் நிறத்துக்கும், நீடித்த அழகுக்கும் காரணமாகிறது” என்கிறார்.


