Last Updated:
கடந்த 14ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதிய போட்டி ஒரு சில தியேட்டர்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை திரையரங்குகளில் கண்டு ரசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். இறுதிப் போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே துபாயில் நடைபெற உள்ளது.
8 அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதின. இவற்றில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. அதில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று இறுதிப்போட்டியில் களம் காண உள்ளன. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக டாஸ் 7.30 மணிக்கு போடப்படும்.
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை இரண்டு முறை எதிர்கொண்டு இரு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இந்த தொடர் முழுவதுமே பாகிஸ்தான் அணி தட்டு தடுமாறி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் வந்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியை இந்தியாவின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் நெட்வொர்க்கான பிவிஆர் ஐநாக்ஸ் தனது திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக பிவிஆர் ஐநாக்ஸ் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.
இந்த ஒளிபரப்பின் மூலமாக ரசிகர்கள் இன்னும் புதுமையான அனுபவத்தை பெறுவார்கள் என பிவிஆர் ஐநாக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதிய போட்டி ஒரு சில தியேட்டர்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
September 28, 2025 3:24 PM IST


