Last Updated:
சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் 200 ரன்களை கடந்தன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 9-ஆவது முறையாக கோப்பையை வெல்வதற்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த தொடர் முழுவதுமே பாகிஸ்தான் அணி தடுமாற்றமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் இன்று வலுவான இந்திய அணியை எதிர் கொள்ள உள்ளது.
8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் லீக் மற்றும் சூப்பர் போர் சுற்றுகளில் எதிர்கொண்டன. இந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. சூப்பர் சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றன.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. வானிலை பொறுத்தளவில் இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன. ஒரு வேளை மழை குறித்து ஆட்டம் தடைபட்டால் செப்டம்பர் 29ஆம் தேதி அதாவது நாளைக்கு ரிசர்வ் டே வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி முழுமையாக நடைபெறும். இருப்பினும் இரண்டு நாட்களிலும் போட்டி நடைபெறாமல் போனால் வின்னர் டைட்டில் மற்றும் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். வானிலையை பொறுத்தளவில் இன்றைக்கு துபாயில் மழை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
September 28, 2025 3:42 PM IST


