அரசியல் சாசனம் இல்லாமல் இருந்திருந்தால் தான் பிரதமராகவே ஆகியிருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிகார் மாநிலம் கயாவில் நடைபெற்ற பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பல ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கும் நிலையில், தங்களது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச அவர்கள் தயாரா என்று சவால் விடுத்தார்.
“அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், நாட்டின் பிரதமராகியிருக்க முடியாது. மக்களின் ஆசியே எனக்கு இந்தப் பதவியை வழங்கியுள்ளது. இந்தியா வளமானதாக மாற வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரின் கனவு. ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். ரூ.5 லட்சம், பிரதமர்-கிசான் சம்மன் நிதி தொடரும் இவை அனைத்தும் மோடியின் உத்தரவாதங்கள்.
பல ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் நேரத்தை வீணடித்தது. பீகாரை ஆண்ட ராஷ்ட்ரிய ஜனதா ஆட்சியில், ஊழல் செய்வதே ஒரு தொழில்போல எங்கும் பரவியிருந்தது. இந்தியா கூட்டணியினர், பீகாரில் நிதிஷ் குமார் செய்த சாதனைகளை தனது சாதனைகளாக கூறுகின்றனர். மேலும் மத்திய அரசு செய்த பணிகளுக்கு இந்தியா கூட்டணியினர் பெருமை தேடிக்கொள்ள முயல்கிறார்கள் என்பது முழு பீகார் மக்களுக்கும் தெரியும்.
ராஷ்ட்ரிய ஜனதா அரசு பீகாருக்குக் கொடுத்தது இரண்டு தான் ஒன்று காட்டாட்சி, மற்றொன்று ஊழல். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது பற்றி பெரியளவில் யாரும் பேசப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. நான் நாட்டில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன். சமூக நீதி என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அரசியல் செய்தன. இந்த தேர்தல், பரந்த பாரதம், பரந்த பீகாருக்காக நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க:
பாபா ராம்தேவை சரமாரியாக கேள்விகளால் விளாசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
வரும் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்றால் அரசியல் சாசனத்தையே மாற்றி விடுவார்கள் என்று லாலு பிரசாத் விமர்சித்தது குறித்து பேசிய பிரதமர் மோடி, அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் அனைவரும் சனாதனத்தை பின்பற்றியவர்கள் என்று கூறினார். தன்னாலோ அல்லது பாஜகவோ மட்டுமின்றி வேறு யாராலும் அரசியல்சாசனத்தை மாற்ற முடியாது என்றும் திட்டவட்டமாகக் தெரிவித்தார்.
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசியவர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற தகுதியற்றவர்கள் என்று இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவை மறைமுகமாக சாடிய பிரதமர், இந்த தேர்தலில் அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
