Last Updated:
இந்த தொடரில் டாஸ் வெல்வது பெரிய பலனை கொடுத்ததாக தெரியவில்லை. டாஸ் வெல்வது என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று இறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தான் விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் காணப்படுகிறது.
இந்த தொடர் முழுவதுமே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி இந்தியாவை தவிர்த்து மற்ற அணிகளை விடவும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் இன்று இறுதிப்போட்டியில் நடைபெற உள்ள சூழலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, நிச்சயமாக இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது சிறப்பான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனமாக இருப்போம். 40 ஓவர்களில் நாங்கள் திட்டமிட்டபடி வியூகங்களை செயல்படுத்தினால் எங்களால் எந்த ஒரு அணியும் வெல்ல முடியும். இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் போட்டோ ஷூட்டை தவிர்த்து உள்ளார். இது அவருடைய விருப்பம்.
அது குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. இறுதி போட்டியை பொறுத்த அளவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அழுத்தம் இருக்கும். நிச்சயமாக நாங்கள் தவறுகள் செய்வோம். நிறைய தவறுகள் செய்ததால் இந்த தொடரில் இந்திய அணியை வெல்ல முடியவில்லை.
இறுதிப் போட்டியில் குறைவான தவறுகளை செய்யும் அணி கோப்பையை வெல்லும். இந்த தொடரில் டாஸ் வெல்வது பெரிய பலனை கொடுத்ததாக தெரியவில்லை. டாஸ் வெல்வது என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.
September 28, 2025 7:15 PM IST


