Last Updated:
ஓபன் ஏஐ நிறுவனம் ChatGPT Go செயலியை இந்தியர்கள் ஒரு வருடம் இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது, இது GPT 5 மாடலில் அதிநவீன அம்சங்களுடன் வருகிறது.
சாட்ஜிபிடி கோ செயற்கை நுண்ணறிவு செயலியை இந்தியர்கள் ஒராண்டுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி முதல் பெங்களூருவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிகழச்சி நடைபெறும் நிலையில் அன்றைய தினமே இந்த சலுகை அமலுக்கு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் பெரிய ஏஐ சந்தையாக இந்தியா காணப்படும் நிலையில், அதை கைப்பற்றும் வகையில் ஓபன் ஏஐ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சாட்ஜிபிடி கோ செயலியை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ நிறுவனம், பின்னர் அதை 399 ரூபாய் சந்தா செலுத்தி பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியது. இந்நிலையில் தான் சாட்ஜிபிடி கோ செயலியை ஓராண்டுக்கு இந்தியர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓபன் ஏஐ அறிவித்துள்ளது.
சாட்ஜிபிடி ஃப்ரீ-யை விட சாட்ஜிபிடி கோ-வில் அதிநவீன அம்சங்கள் உள்ளதாகவும், ஜிபிடி 5 மாடலில் இது வேலை செய்வதால் பயனர்கள் அதிவிரைவாக தகவல்களை பெற முடியும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
October 29, 2025 8:16 AM IST


