மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற சிபிடி (Central Board of Trustees) கூட்டத்தில், ஊழியர்களின் நிதி தேவைகளை எளிதாக்கும் நோக்கில் புதிய EPFO விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின்படி, வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள ஊழியர் மற்றும் நிறுவன பங்களிப்பு தொகை உட்பட 100% வரை பணத்தை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற அவசர தேவைகளுக்காக பணம் எடுப்பது இனி எளிதாகும் என அரசு தெரிவித்துள்ளது.


