Last Updated:
டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று இறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தான் விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் காணப்படுகிறது.
இந்த தொடர் முழுவதுமே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி இந்தியாவை தவிர்த்து மற்ற அணிகளை விடவும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்த நிலையில் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டியில் காயம் காரணமாக நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா இநதிய அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் களம் இறங்கவுள்ளார்.
இந்தியா (பிளேயிங் லெவன்): அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்): சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சைம் அயூப், சல்மான் அகா(கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது
September 28, 2025 7:58 PM IST


