Last Updated:
இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் அந்நாட்டு நேரப்படி மாலை 6.30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசி கோப்பை இறுதிப்போடியை நேரலையில் பார்ப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்த போட்டி தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அதேபோன்று சூப்பர் ஃபோர் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறந்த பார்முடன் உள்ளது.
குறிப்பாக இன்று இறுதிப் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியை லீக் மற்றும் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணி மிக எளிதாக வீழ்த்தி இருந்தது. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இன்று விளையாடும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் அந்நாட்டு நேரப்படி மாலை 6.30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் நேரலையாக ஒளிபரப்பு செய்கின்றன. SonyLIV மற்றும் FanCode ஆப் மூலமாகவும் இந்த போட்டியை நேரலையில் கண்டு மகிழலாம்.
September 28, 2025 8:05 PM IST


