Last Updated:
மொந்தா புயல் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. ஆந்திரம், மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் பகுதிகளில் பலத்த காற்று, மரங்கள் முறிவு, மின் கம்பங்கள் சேதம் ஏற்பட்டது.
வங்கக்கடலில் உருவான மொந்தா புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது.
வங்க கடலில் நிலவிய மொந்தா புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே, தீவிர புயலாக கரையை கடந்தபோது பலத்த காற்று வீசியது. மேலும் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில், வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்த மொந்தா புயல், மசூலிப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தெற்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்தபோது கரையை கடக்க ஆரம்பித்தது.
அப்போது மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் மரங்கள் முறிந்தன. ஏராளமான மின் கம்பங்கள் சேதமடைந்தன. புயல் முழுவதும் கரையை கடக்க மூன்று மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. மொந்தா புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.
October 28, 2025 9:14 PM IST


