Last Updated:
இந்திய அணியின் மருத்துவர் ஷ்ரேயாஸின் உடல்நிலை முன்னேற்றத்தைக் கண்காணிக்க சிட்னியிலேயே தங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது காயம் அடைந்த துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் எப்போது குணம் அடைவார் என்பது குறித்த தகவல்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியின்போது மூன்றாவது மேட்சில் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை அற்புதமாக ஸ்ரேயாஸ் ஐயர் கேட்ச் பிடித்தார்.
அப்போது விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் அதன் பின்னர் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிட்னியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிசிசிஐ மருத்துவக் குழு, சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அவரது முன்னேற்றத்தைக் கவனமாகக் கண்காணித்து வருகிறது. இந்திய அணியின் மருத்துவர் அவரது தினசரி முன்னேற்றத்தைக் கண்காணிக்க சிட்னியிலேயே தங்கியுள்ளார்.
காயத்திலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் எப்போது குணம் அடைவார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் மண்ணீரல் காயத்தின் வகையைப் பொறுத்து, அவர் முழுப் பயிற்சிக்குத் திரும்ப 6 முதல் 12 வாரங்கள் வரை ஆகலாம் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
October 28, 2025 8:34 PM IST


