கோலாலம்பூர்:
பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினை எதிர்த்து கருத்து தெரிவித்த இரு மாநில தலைவர்கள், கட்சியின் உள்கட்டளை மீறியது காரணமாக பெரிக்காத்தானிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்ற உறுப்பினர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் ஒற்றுமையும் ஒழுங்கும் குலையாதவாறு, நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பெர்லிஸ் பெரிக்காத்தான் தலைவராக இருந்த ஹாஜி முஹமட் சுக்கிரி ரம்லி, பகாங் பெரிக்காத்தான் தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ சைபுடின் அப்துல்லா ஆகிய இருவரும் மாநிலத் தலைவர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுட்ள்ளனர்.
நீக்கப்பட்டவர்கள் இருவரும், தங்களது மாநிலங்களில் கட்சியின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களாக இருந்ததாகவும், சமீபத்தில் முஹிடினின் தலைமையை திறம்பட விமர்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “கட்சியின் முடிவுகளை மீறி, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்காது” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கட்சியின் சில மூத்த தலைவர்கள், வரவிருக்கும் மாநில மற்றும் பொதுத் தேர்தல்களை முன்னிட்டு, கட்சிக்குள் ஒற்றுமையைப் பேணுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.




