சிங்கப்பூரில் 80 வயது முதியவரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக 55 வயதான நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் ஏப்ரல் 13ஆம் தேதி அன்று ரெட்ஹிலில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து இரவு 9.30 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு நபர்களுக்கு இடையேயான சண்டையை தடுக்க முயன்ற போது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

