• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நேபாள இடைக்கால பிரதமரானார் சுஷிலா கார்கி! வரலாற்றில் முதல் பெண் இவர்தான்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
நேபாள இடைக்கால பிரதமரானார் சுஷிலா கார்கி! வரலாற்றில் முதல் பெண் இவர்தான்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 12, 2025 10:18 PM IST

நேபாளத்தில் சுஷிலா கார்கி இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டு, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றுள்ளார்.

News18
News18

ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் இளைஞர்கள் இணைந்து நடத்திய போராட்டம், வன்முறையாக மாறி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி, அதிபர்  ராம் சந்திர பவுடல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அங்கு ராணுவம் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

இதனையடுத்து அமைதி திரும்பியுள்ள நேபாளத்தில், 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணொளி வாயிலாகக் கூடி நாட்டின் இடைக்காலத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என விவாதித்தனர்.

அதில், காத்மாண்டு மேயர் பாலேன் ஷா, அந்நாட்டு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, அந்நாட்டு மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி குல்மான் கிஷிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றன.

இந்நிலையில், தற்போது நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பதவி ஏற்றார். இதன் மூலம், இவர்தான் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் எனும் சிறப்பையும் பெற்றுள்ளார்.

ஏற்கனவே அந்நாட்டின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்ற முதல் பெண் என்ற வரலாற்றைக் கொண்டிருந்த சுஷிலா கார்கி தற்போது, அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சிறப்பையும் பெறுகிறார்.

யார் இந்த பிரதமர் சுஷிலா கார்கி?

நேபாளத்தில் பிறந்த சுஷிலா கார்கி முதலில் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றி, 2016ஆம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரலாறு படைத்தவர் சுஷிலா கார்கி. அச்சமற்ற தீர்ப்புகள், ஊழலைப் பொறுத்துக்கொள்ளாததற்காக நேபாள மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர். ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சரையே சிறையில் அடைத்தது உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் மூலம் அச்சமற்றவர் என மக்களிடம் பெயர் பெற்றவர்.

இதையும் படிங்க: News18 Exclusive | நேபாள இடைக்காலப் பிரதமர் சுஷிலா கார்கி இந்தியாவைப் பற்றி சொன்னது என்ன தெரியுமா?

இதனால், அரசுடன் கடுமையான மோதலையும் அவர் சந்தித்துள்ளார். 2016ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்குள் அதாவது 2017ஆம் ஆண்டு அவரைப் பதவி நீக்கம் செய்யத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகச் செய்திகள் உள்ளன. தற்போது நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், நேபாள வரலாற்றில் முதல் பெண் பிரதமர் சுஷிலா கார்கி என வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 12, 2025 9:36 PM IST

Read More

Previous Post

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஆயுர்வேத பிராண்டுகளில் ஒன்றின் வெற்றி கதை

Next Post

சிமென்ட் தொழிற்சாலையில் தீ: கோல கங்சாரில் சம்பவம் | Makkal Osai

Next Post
சிமென்ட் தொழிற்சாலையில் தீ: கோல கங்சாரில் சம்பவம் | Makkal Osai

சிமென்ட் தொழிற்சாலையில் தீ: கோல கங்சாரில் சம்பவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin