Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது. ஈரான் இஸ்ரேல் போரால் தங்கத்தின் விலை மேலும அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்

