• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி | rohit sharma wish to play big innings says mohammad kaif

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி | rohit sharma wish to play big innings says mohammad kaif
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: களத்​தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்​னிங்ஸை விளை​யாட விரும்​பு​கிறார் ரோஹித் சர்மா என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் முகமது கைஃப் தெரி​வித்​தார். இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடர் அண்​மை​யில் முடிவடைந்​தது. இதில் 2-1 என்ற கணக்​கில் ஆஸ்​திரேலிய அணி வென்று தொடரைக் கைப்​பற்​றியது.

ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான இந்த ஒரு​நாள் கிரிக்​கெட் தொடர் தொடங்​கு​வதற்கு முன்​பாக இந்​திய அணி​யின் மூத்த வீர​ரான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ருக்கு பல்​வேறு அழுத்​தங்​கள் இருந்​தன. 2027-ம் ஆண்டு நடை​பெறவுள்ள ஒரு​நாள் உலகக்​கோப்பை போட்டி வரை ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ரால் விளை​யாட முடி​யாது. இந்த ஒரு​நாள் தொடருடன் ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் அணியி​லிருந்து அனுப்​பப்​படு​வார் என்​றெல்​லாம் பேச்​சுகள் எழுந்​தவண்​ணம் இருந்​தன. ஆனால், இதுதொடர்​பாக எந்​த​வித கருத்​தை​யும் தெரிவிக்​காமல் இருந்த ரோஹித் சர்மா தனது பேட்​டால் அனை​வருக்​கும் பதிலடி கொடுத்​துள்​ளார்.

இந்​தத் தொடரில் முதல் போட்​டி​யில் 8 ரன்​களும், 2-வது போட்​டி​யில் 73 ரன்​களும், 3-வது போட்​டி​யில் ஆட்​ட​மிழக்​காமல் 121 ரன்​களும் குவித்​தார் இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்​மா. இந்​தத் தொடரில் 236 பந்​துகளைச் சந்​தித்​துள்​ளார்.

இதுகுறித்து தனி​யார் யூடியூப் சானலுக்கு இந்​திய கிரிக்​கெட் அணி முன்​னாள் வீரர் முகமது கைஃப் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: தற்​போது முடிந்​துள்ள ஆஸ்​திரேலிய தொடரில் அவர் மிகச் சிறப்​பாக விளை​யாடி​னார். ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான 3 போட்​டிகள் கொண்ட தொடரில், அபார​மாக விளை​யாடி ஒரு​நாள் போட்​டிகளில் தனது திறமையை மீண்​டும் நிரூபித்​தார் ரோஹித். 7 மாதங்​களுக்​குப் பிறகு சர்​வ​தேச கிரிக்​கெட்​டுக்கு அவர் திரும்​பி​யுள்ள நிலை​யில், அவரது நிதான​மான, அதே நேரத்​தில் அபார​மான விளை​யாட்​டுத் திறனை களத்​தில் வெளிப்​படுத்​தி​னார்.

அவரது நிதான ஆட்​டம், கேப்​டன் பதவியைப் பற்​றியது என்று நான் நினைக்​கிறேன். இப்​போது அவர் ஒரு பேட்​ஸ்​மே​னாக மட்​டுமே விளை​யாடு​கிறார். தற்​போது அவர் அணி​யின் கேப்​டன் கிடை​யாது. அந்த அழுத்​தம் அவருக்​குக் குறைந்​துள்​ளது. முதல் பந்​திலேயே சிக்​ஸர் அடித்து முன்​னால் இருந்து வழிநடத்​தும் முன்​மா​திரியை அமைப்​ப​தன் மூலம் அவருக்கு அழுத்​தம் கொடுக்​கப்​படுவ​தில்​லை. இந்​தத் தொடரில் அவர் நிறைய பந்​துகளை எதிர்​கொண்டு விளை​யாடி​யுள்​ளார்.

தான் எடுக்​கும் ரன்​களின் எண்​ணிக்​கையை வைத்து மக்​கள் அவரை மதிப்​பிடு​வார்​கள் என்​பது ரோஹித் சர்​மாவுக்​குத் தெரி​யும். தற்​போது அவர் 20 பந்​துகளில் 40 ரன்​கள் எடுக்​கும் அதிரடி​யான விளை​யாட்டை விளை​யாட மாட்​டார் என்று எண்​ணுகிறேன். களத்​தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளை​யாட அவர் விழைகிறார். இதற்​காக அவர் பெரிய இன்​னிங்​ஸ்​களை விளை​யாட வேண்​டும் என்​பது அவருக்​குத் தெரி​யும்.

களத்​தில் அவர் நீண்ட நேரம் நின்று பெரிய ஸ்கோரை எடுக்க விரும்​பு​கிறார் என்​பது தெளி​வாகத் தெரி​கிறது. போட்​டி​யின்​போது அவர் குறை​வான ரிஸ்க்​கு​களை எடுத்து தனது இன்​னிங்ஸை ஆழமாக எடுத்​துச் செல்ல விரும்​பு​கிறார். முந்​தைய சில ஆட்​டங்​களில் நடந்​ததைப் போல தனது விக்​கெட்டை எளி​தில் இழக்க மாட்​டார் என்​பது இப்​போது தெளி​வாகி​யுள்​ளது.இவ்​வாறு கைஃப்​ தெரிவித்​தார்​.



Read More

Previous Post

பிகார் தேர்தல்: முடியப்போகும் வேட்புமனு தாக்கல்! முடியாத காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு | இந்தியா

Next Post

வாடகை வீடா…? சொந்த வீடா…? உங்களுடைய விருப்பம் மற்றும் தேர்வு என்ன?

Next Post
வாடகை வீடா…? சொந்த வீடா…? உங்களுடைய விருப்பம் மற்றும் தேர்வு என்ன?

வாடகை வீடா...? சொந்த வீடா...? உங்களுடைய விருப்பம் மற்றும் தேர்வு என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin