• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PPF vs FD… எதில் முதலீடு செய்வது பெஸ்ட்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
PPF vs FD… எதில் முதலீடு செய்வது பெஸ்ட்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 17, 2025 8:31 AM IST

PPF vs FD | PPF பொறுத்தவரை E-E-E என்ற நிலையை கொண்டுள்ளது. அதாவது வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80Cன் கீழ் PPF மூலமாக நீங்கள் பெறும் வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை.

News18
News18

பாதுகாப்பான முதலீடுகள் பற்றி பேசும்போது இந்தியர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) மற்றும் வங்கி ஃபிக்சட் டெபாசிட்கள் (FD) ஆகிய இரண்டையும் தான். இதில் PPF என்பது அரசு ஆதரவு பெறும் முதலீட்டு திட்டம். அதேபோல ஃபிக்சட் டெபாசிட்கள் RBI அங்கீகரித்த வங்கிகளால் வழங்கப்படும் ஒரு சேமிப்பு திட்டம்.

ஆனால், இவை பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் PPF என்பது வரி சலுகைகளுடன் நீண்ட ஓய்வுகால திட்டமாக அமைகிறது. அதே சமயத்தில் FD குறுகிய முதல் மிதமான அளவு கால அளவு கொண்ட டெபாசிட்களுடன் உறுதி அளிக்கப்பட்ட ரிட்டன்களை வழங்குகிறது. ஆனால் இந்த இரண்டில் எதை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் உங்களுக்கு இருந்தால் அதனை விளக்கும்படியான சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கால அளவு

PPF என்பது 15 வருட லாக்-இன் பீரியட் கொண்டது. அதே சமயத்தில் அதனை 7வது வருடத்தில் இருந்து மட்டுமே உங்களால் வித்ட்ரா செய்ய முடியும். அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. ஓய்வு கால அல்லது குழந்தைகளின் கல்வி சம்பந்தப்பட்ட காரணங்களுக்கு, அதாவது நீண்ட கால இலக்குகளுக்கு சிறந்தது. மறுபுறம் FD 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான கால அளவை கொண்டுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட அபராதத்தை செலுத்தி உங்களுடைய FD கணக்கை முன்கூட்டியே உங்களால் வித்ட்ரா செய்ய முடியும்.

வட்டி விகிதம் மற்றும் ரிட்டன்

PPF வட்டி விகிதங்கள் என்பது ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது ஒரு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான வட்டியானது கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படும். இந்த திட்டம் மூலமாக கிடைக்கும் ரிட்டன்களுக்கு வரி செலுத்த தேவையில்லை. அதே சமயத்தில் FDகளை பொருத்தவரை வட்டி விகிதங்களானது கால அளவை பொறுத்து மாறுபடும். பொதுவாக 6 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

வரி சலுகைகள்

PPF பொறுத்தவரை E-E-E என்ற நிலையை கொண்டுள்ளது. அதாவது வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80Cன் கீழ் PPF மூலமாக நீங்கள் பெறும் வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை. மேலும் மெச்சூரிட்டி தொகைக்கு வரி வசூலிக்கப்படாது. ஆனால் FDகள் பிரிவு 80Cன் கீழ் வரிக்கு உட்பட்டதாக இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு வரி சேமிப்பு FD வேண்டுமென்றால் நீங்கள் 5 வருட லாக்கின் பீரியட் கொண்ட FD திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். FD ரிட்டன்களுக்கு முழுக்க முழுக்க நீங்கள் வரி செலுத்த வேண்டும். எனவே வரிக்கு உட்பட்ட வருமானத்தை சேமிக்க நினைக்கும் மாத சம்பளம் பெறும் நபர்களுக்கு PPF திட்டம் ஏற்றது.

பாதுகாப்பு

PPF மற்றும் FD ஆகிய இரண்டுமே பாதுகாப்பானது. PPF என்பது முழுக்க முழுக்க அரசு உத்தரவாதத்தை பெறுகிறது. இதில் எந்த விதமான ரிஸ்க்கும் கிடையாது. அதேபோல FDகள் வங்கிகளின் ஆதரவை பெறுகின்றன. 5 லட்ச ரூபாய் வரை ஒரு வங்கியில் டெபாசிட் செய்து அதற்கான இன்சூரன்ஸ் திட்டத்தையும் உங்களால் பெற முடியும்.

இரண்டில் எதை தேர்வு செய்ய வேண்டும்?

உங்களுடைய இலக்கு நீண்ட கால செல்வ சேமிப்பு மற்றும் வரி சலுகைகள் வேண்டும் என்பதாக இருந்தால் PPF உங்களுக்கான ஆப்ஷன். இந்த 15 வருட கால லாக்கின் பீரியட் கொண்ட PPF எந்த ஒரு வரியும் இல்லாத ஒரு அற்புதமான ஓய்வு கால முதலீட்டு கருவியாக இருக்கிறது. இதுவே குறுகிய கால முதலீடு, அதே சமயத்தில் பணத்தை உடனடியாக எடுக்க வேண்டும் மற்றும் நீண்ட கால அளவாக இல்லாமல் உறுதி அளிக்கப்பட்ட ரிட்டன்கள் வேண்டும் என்பவர்கள் ஃபிக்சட் டெபாசிட்களை தேர்வு செய்யலாம்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 17, 2025 8:31 AM IST

Read More

Previous Post

காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை | treatment for injured indian cricket player shreyas iyer

Next Post

பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு | Islamist militants kill 11 Pakistani soldiers in ambush, sources say

Next Post
பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு | Islamist militants kill 11 Pakistani soldiers in ambush, sources say

பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு | Islamist militants kill 11 Pakistani soldiers in ambush, sources say

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin