கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு நஜ்வா கானெம், கதீஜா ஷெரீஃப், கைரியா சபர், சிஹாம் சபர் மற்றும் அமல் அகமது அல்-சதா என்று மொத்தம் ஐந்து மனைவிகள் இருந்தனர். இருப்பினும் அவர்களில் இரண்டு மனைவிகளை பின்லேடன் விவாகரத்து செய்தார். 2011-ல் பின்லேடன் இறக்கும் போது, அவரது மூன்று மனைவிகளும் அவரது பல குழந்தைகளும் அபோதாபாத் வளாகத்தில் அவருடன் வசித்து வந்தனர் என்று சொல்லப்படுகிறது.


