• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PF பணத்தை ATMல் இருந்து எப்படி வித்டிரா செய்வது…? படிப்படியான வழிமுறைகள் இதோ… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
PF பணத்தை ATMல் இருந்து எப்படி வித்டிரா செய்வது…? படிப்படியான வழிமுறைகள் இதோ… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 27, 2025 4:13 PM IST

EPF சம்பந்தமான ஒரு சில விதிகளில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து உங்களுடைய பிராவிடண்ட் ஃபண்டின் ஒரு பகுதியை ATM மூலமாகவும் நீங்கள் வித்டிரா செய்து கொள்ளலாம்.

Rapid Read
News18
News18

EPF அல்லது எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட் என்பது அரசு ஆதரவு பெற்று வரும் ஒரு ஓய்வு கால சேமிப்பு திட்டமாக அமைகிறது. மாத வருமானம் பெறும் நபர்கள் மட்டுமே இதன் பலன்களை அனுபவிக்க முடியும். இந்த திட்டத்தில் ஊழியர் மற்றும் அவர் வேலை செய்யும் நிறுவனம் ஆகிய இருவருமே ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் ஒரு சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் பங்களிப்பார்கள்.

இந்த பணத்தை நீங்கள் அவசர காலத்தின்போது பயன்படுத்திக் கொள்ளலாம். EPF சம்பந்தமான ஒரு சில விதிகளில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து உங்களுடைய பிராவிடண்ட் ஃபண்டின் ஒரு பகுதியை ATM மூலமாகவும் நீங்கள் வித்டிரா செய்து கொள்ளலாம்.

எந்தெந்த சூழ்நிலைகளில் உங்களால் PF பணத்தை வித்டிரா செய்ய முடியும்?

ஊழியர்கள் தற்போது தங்களுடைய மொத்த தகுதி பெரும் PF தொகையையும் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை வீதத்தில் வித்டிரா செய்யலாம். இதற்கு அவசரக காலம், திருமணம், கல்வி அல்லது உடல்நல குறைவு போன்ற காரணங்கள் அனுமதிக்கப்படுகிறது.

ATM மூலமாக PF பணத்தை வித்டிரா செய்வது எப்படி?

PF பணத்தை வித்டிரா செய்வதற்கு முதலில் உங்களுடைய UAN ஆக்டிவாக இருக்க வேண்டும். மேலும், உங்களுடைய PF கணக்கு உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனோடு சேர்த்து உங்களுடைய PF கணக்கில் உங்களின் ஆதார் மற்றும் PAN விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் பிறகுதான் உங்களுடைய PF வித்டிராயல் செயல்முறைக்கான ஆன்லைன் படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். அப்போதுதான் PF பணத்தை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் வங்கிக் கணக்கில் உங்களால் பெற முடியும்.

PF பணத்தை வித்டிரா செய்வதற்கான வழிமுறை:

  • PF பணத்தை நேரடியாக உங்களால் ATMல் இருந்து வித்டிரா செய்ய முடியாது. இதற்கு நீங்கள் உங்களுடைய UAN மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி EPFO மெம்பர் போர்ட்டலில் லாகின் செய்து, ‘Online Services’ என்ற பிரிவுக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு ‘Claim (Form-31, 19, 10C, 10D)’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • அடுத்தபடியாக உங்களுடைய வங்கிக் கணக்கு எண்ணை வெரிஃபை செய்துவிட்டு, ‘Proceed for Online Claim’ என்பதை கிளிக் செய்வதன் மூலமாக ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். இந்த செயல்முறையை தொடர்ந்து உங்களுடைய PF தொகை நேரடியாக உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்.
  • ‘I want to Apply For’ பிரிவில் ‘PF Advance (Form 31)’ என்பதை தேர்வு செய்துவிட்டு, நீங்கள் எதற்காக PF பணத்தை வித்டிரா செய்ய விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை வழங்க வேண்டும். உதாரணமாக மருத்துவ செலவு, திருமணம், வீடு வாங்குவது, வீடு கட்டுவது, குழந்தைகளின் படிப்புச் செலவு போன்றவை. அதன் பிறகு நீங்கள் வித்டிரா செய்ய விரும்பும் தொகையின் அளவை நிரப்ப வேண்டும்.
  • இப்போது உங்களுடைய வங்கிக் கணக்கின் செக் புக் அல்லது பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அப்லோடு செய்யுங்கள். அனைத்து விவரங்களையும் நிரப்பிய பின்னர் ‘Get Aadhaar OTP’ என்பதை கிளிக் செய்து விட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரில் கிடைத்த OTP-ஐ என்டர் செய்யுங்கள்.
  • ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபின்னர், EPFO உங்களுடைய விண்ணப்பத்தை ஆய்வு செய்யும். அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொகை 3 முதல் 7 வேலை நாட்களுக்குள் நேரடியாக உங்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
  • PF தொகை உங்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பிறகு, அதனை உங்களுடைய வங்கியின் ATM கார்டு பயன்படுத்தி ஏதாவது ஒரு ATMல் நீங்கள் வித்டிரா செய்து கொள்ளலாம். மேலும், வங்கிக் கிளைக்கு செல்வதன் மூலமாகவும், ஆன்லைனில் டிரான்ஸ்ஃபர் செய்வதன் மூலமாகவும் அந்த தொகையை நீங்கள் பயன்படுத்த முடியும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 27, 2025 4:13 PM IST

Read More

Previous Post

உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை பிரித்வி ஷா – 72 பந்துகளில் சதமடித்து சாதனை! | Prithvi Shaw, the resurgent phoenix – hits a century in 72 balls, sets a record

Next Post

ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண் | Indian who fought for the Russian army surrenders to Ukrainian forces

Next Post
ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண் | Indian who fought for the Russian army surrenders to Ukrainian forces

ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண் | Indian who fought for the Russian army surrenders to Ukrainian forces

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin