Last Updated:
அரச தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது அதிகாரப்பூர்வ வெப்சைட், BSNL செல்ஃப்கேர் ஆப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெயில் அவுட்லெட்ஸ் மூலம் புதியது மற்றும் பிரத்யேக சம்மான் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக “சம்மான்” தற்போதைய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1,812 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிரத்யேக திட்டமானது தினசரி டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் பிற சலுகைகளுடன் ஆண்டு முழுவதும் மொபைல் கனெக்டிவிட்டியை யூஸர்களுக்கு வழங்குகிறது.
அரச தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது அதிகாரப்பூர்வ வெப்சைட், BSNL செல்ஃப்கேர் ஆப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெயில் அவுட்லெட்ஸ் மூலம் புதியது மற்றும் பிரத்யேக சம்மான் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், மூத்த குடிமக்களுக்கான இந்த பிரத்யேக பிளான் நவம்பர் 18, 2025 வரை மட்டுமே கிடைக்கும் என்று BSNL தெரிவித்துள்ளது.
புதிய சம்மன் திட்டத்தின் கீழ், யூசர்கள் தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் ஆகியவற்றைப் பெறுவார்கள். இந்த BSNL பிளானின் கீழ் சேரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்கப்படும். இதுபோன்ற முக்கிய நன்மைகளைத் தவிர இந்த பிளானை ரீசார்ஜ் செய்வோர் கூடுதல் கட்டணமின்றி ஆறு மாத இலவச BiTV-க்கான சந்தாவைப் பெறுவார்கள். இதன்மூலம் அவர்கள் பல்வேறு பொழுதுபோக்கு விருப்பங்களை அணுக முடியும்.
இந்த திட்டத்தின் அறிமுகம் BSNL தனது வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்த பல யூசர் செக்மென்ட்ஸ்களுக்கு மலிவு விலையில் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்குகிறது. வழங்கப்பட்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். மூத்த குடிமக்களை இலக்காகக் கொண்ட பிரத்யேக திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், நிலையான நெட்வொர்க் அணுகலை நம்பியிருக்கும் பழைய யூசர்களுக்கு நீண்டகால மற்றும் வசதியான மொபைல் சேவைகளை வழங்க அதன் மூலம் நிறுவனம் முயற்சிக்கிறது.
இதனிடையே சம்மன் திட்டத்துடன், BSNL ஒரு சிறப்பு தீபாவளி போனான்சா சலுகையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், புதிய யூசர்கள் ரூ.1-க்கு 4G திட்டத்தைப் பெறலாம். இந்த திட்டத்தில் தினமும் 2GB அளவிலான 4G டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் KYC சரிபார்ப்புக்குப் பிறகு இலவச சிம் ஆக்டிவேஷன் ஆகியவை அடங்கும். இந்த ரூ.1 சலுகை 30 நாள் வேலிடிட்டி பீரியட் உடன் வருகிறது மற்றும் நவம்பர் 15 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். முதல்முறையாக BSNL-ஐ பயன்படுத்தும் யூசர்களுக்கு நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 4G நெட்வொர்க்கை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கம்.
BSNL நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் பிளான்களில் கூடுதல் பண்டிகை கால தள்ளுபடிகளையும் வழங்குகிறது. செல்ஃப்-கேர் ஆப் அல்லது BSNL வெப்சைட் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.485 மற்றும் ரூ.1,999 திட்டங்களில் 5% பண்டிகை கால சலுகையை பெறலாம். இந்த சலுகையில் பாதி (2.5%) உடனடி தள்ளுபடியாக வழங்கப்படுகிறது, மற்ற பாதி சோஷியல் சர்வீஸ் திட்டங்களுக்கு பங்களிக்கப்படுகிறது. மேலும், வேறொருவருக்கு ரீசார்ஜ் கிஃப்ட் அளிப்பவர்கள், தங்கள் பிளானில் கூடுதலாக 2.5% தள்ளுபடியைப் பெற உதவுவார்கள்.
October 27, 2025 5:53 PM IST
மூத்த குடிமக்களுக்கு பிரத்யேகமான புதிய பிளானை அறிமுகம் செய்துள்ள BSNL நிறுவனம்… சிறப்பம்சங்கள் என்னென்ன…?


