Last Updated:
இந்த போட்டியின் போது அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி சென்று அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்தார். அப்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடது விலா எழும்பில் காயம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் கேட்ச் பிடிக்கும் போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதால் சிட்னி மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய கைப்பற்றியது. 3 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் ரோஹித் மற்றும் விராட் கோலியின் கிளாசிக் பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி சென்று அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்தார். அப்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடது விலா எழும்பில் காயம் ஏற்பட்டது. டிரெஸ்ஸிங் ரூம் திரும்பிய சிறுது நேரத்தில் ஸ்ரேயாஸ் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்ரோயாஸ் ஐயர் 2 நாட்களாக ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை சீராக இருந்தாலும் காயத்தின் தீவிரத்தை பொறுத்து அவர் 2 முதல் 5 நாட்கள் வரை மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் சுமார் மூன்று வாரங்கள் விளையாடாமல் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது குணமடையும் காலம் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில் டி20 தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டி20 போட்டி வரும் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி அறிவித்து இருந்த டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
October 27, 2025 12:47 PM IST


