• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தீபாவளி தொடர் விடுமுறை : விண்ணைமுட்டும் உயர்வில் விமான டிக்கெட் கட்டணங்கள்… பயணிகள் ஷாக்! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
தீபாவளி தொடர் விடுமுறை : விண்ணைமுட்டும் உயர்வில் விமான டிக்கெட் கட்டணங்கள்… பயணிகள் ஷாக்! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த வெகுஜனப் பயணத்தால், சென்னை உள்நாட்டு விமான நிலையங்களில் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு, அதாவது 5 முதல் 6 மடங்கு வரை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன. இதனால் விமானப் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்லும் மக்கள் ரயில், அரசு சிறப்புப் பேருந்துகள், மற்றும் கார்கள் மூலம் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்காக ரயில்வே மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும், ரயில் மற்றும் பேருந்து பயணங்களில் ஏற்படும் பல மணி நேர பயண நேரம் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகள் பலர் ஓரிரு மணி நேரத்தில் விரைந்து செல்ல விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நாளை (சனி) முதல் தொடர் விடுமுறைகள் ஆரம்பிப்பதால், இன்று வெள்ளிக்கிழமை முதல் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

பயணிகள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளி மாநில விமானங்களின் கட்டணங்கள் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் வட மாநிலங்களுக்குச் செல்லும் விமானங்களில் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

முக்கிய நகரங்களுக்கான கட்டண உயர்வு விவரம் (தோராயமாக):

வழித்தடம் சாதாரண நாள் கட்டணம் (ரூ.) இன்றைய கட்டணம் (ரூ.) கட்டண உயர்வு (மடங்குகள்)
சென்னை – மதுரை ₹3,129 ₹17,683 வரை ~5.6 மடங்கு
சென்னை – திருச்சி ₹3,608 ₹15,233 வரை ~4.2 மடங்கு
சென்னை – கோவை ₹4,351 ₹17,158 வரை ~3.9 மடங்கு
சென்னை – தூத்துக்குடி ₹3,608 ₹17,053 வரை ~4.7 மடங்கு
சென்னை – டெல்லி ₹5,933 ₹30,414 வரை ~5.1 மடங்கு
சென்னை – மும்பை ₹3,356 ₹21,960 வரை ~6.5 மடங்கு
சென்னை – கொல்கத்தா ₹5,293 ₹22,169 வரை ~4.2 மடங்கு
சென்னை – ஹைதராபாத் ₹2,926 ₹15,309 வரை ~5.2 மடங்கு
சென்னை – கவுகாத்தி ₹6,499 ₹21,639 வரை ~3.3 மடங்கு
சென்னை – புவனேஸ்வர் ₹4,522 ₹14,428 வரை ~3.2 மடங்கு
சென்னை – ஜெய்ப்பூர் ₹6,151 ₹21,591 வரை ~3.5 மடங்கு
சென்னை – பாட்னா ₹4,972 ₹15,584 வரை ~3.1 மடங்கு

சென்னை – சேலம் வழித்தடத்தில் இன்று மற்றும் நாளைக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிசிஏ உத்தரவை மீறியதா விமான நிறுவனங்கள்?

பண்டிகை காலங்களில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி விமான நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில், பண்டிகைக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கூடுதல் விமானங்களை இயக்கி பயணிகளுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவனங்களின் விளக்கம்

இந்தக் கட்டண உயர்வு குறித்து விமான நிறுவனங்களின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அவர்கள், “நாங்கள் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தவில்லை. விமானங்களில் வழக்கமாக வழங்கப்படும் குறைந்த கட்டண டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டன. தற்போது உயர் கட்டண டிக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதால், அந்த டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்தக் கட்டணம் உயர்வு போல் தெரிகிறது” என்று விளக்கமளித்துள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

October 17, 2025 10:22 AM IST

Read More

Previous Post

கிரிக்கெட்டில் சூப்பர் ஓவருக்கான விதிகள் என்னென்ன? – முழு விளக்கம் | super over rules in cricket explained

Next Post

அட்டைப்படம்

Next Post
அட்டைப்படம்

அட்டைப்படம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin