Last Updated:
அதிகமாக கார்டியோ பயிற்சி செய்யாமல் ஒரு பாடி பில்டரைப் போன்று ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொண்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று ரோஹித் சர்மா அதிரடியான கம் பேக்கை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இருப்பினும் அணியின் சீனியர் ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக கடைசி மேட்ச்சில் சதம் அடித்த ரோஹித் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதேபோன்று மற்றொரு சீனியர் வீரர் விராட்கோலி அரை சதம் கடந்து தனது ஃபார்மை நிரூபித்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கு ரோஹித் சர்மா தயாரான விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியதாவது-
ஆஸ்திரேலிய தொடருக்காக ரோஹித் சர்மா 3 மாதங்கள் தீவிர உடற் பயிற்சி செய்தார். அவருக்கு பிடித்தமான வட பாவ் சாப்பிடுவதையும் ரோஹித் சர்மா நிறுத்தி விட்டார். ஜிம்மில் பாடி பில்டரைப் போன்று ரோஹித் சர்மா ஒர்க் அவுட் செய்தார்.
ஏற்கனவே அவர் 11 கிலோ எடையை குறைத்து விட்டார். அவர் இன்னும் எடையை குறைக்க போராடுகிறார். ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 மணி நேரம் அவரது உடற்பயிற்சி இருக்கும். அதிகமாக கார்டியோ பயிற்சி செய்யாமல் ஒரு பாடி பில்டரைப் போன்று ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொண்டார்.
October 26, 2025 8:51 PM IST


