Last Updated:
உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்கள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.
விசா பிரச்னைக்கு மத்தியில் உயர்கல்விக்காக அமெரிக்காவை தேர்ந்தெடுக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்கள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜெர்மனி, அயர்லாந்து, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி பெற பெரும்பாலான இந்திய மாணவர்கள் விரும்புவது தெரியவருகிறது.
அந்த வகையில், ஜெர்மனிக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2023இல் 4 சதவீதமாக இருந்த நிலையில், 2025இல் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேபோல, அயர்லாந்தில் 3 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாகவும், பிரான்ஸில் 39 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
இதனிடையே, கனடாவிற்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 11 சதவீதத்தில் இருந்து கடுமையாக சரிந்து 2.3 சதவீதமாக குறைந்துள்ளது.
அதேபோல, அமெரிக்க பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 54 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக சரிந்துள்ளது.
Delhi,Delhi,Delhi
October 26, 2025 9:11 PM IST


