Last Updated:
இருவரும் இணைந்து 2 ஆவது விக்கெட்டிற்கு 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோலியுடன் இணைந்து 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பான தருணம் என்று முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இருப்பினும் அணியின் சீனியர் ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக கடைசி மேட்ச்சில் சதம் அடித்த ரோஹித் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதேபோன்று மற்றொரு சீனியர் வீரர் விராட்கோலி அரை சதம் கடந்து தனது ஃபார்மை நிரூபித்தார்.
இருவரும் இணைந்து 2 ஆவது விக்கெட்டிற்கு 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை காண வந்த ரசிகர்களுக்கு சிட்னியில் நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டி விருந்தாக அமைந்தது.
இந்நிலையில் மேட்ச் குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன். குறிப்பாக விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது சிறப்பான தருணம்.
October 26, 2025 9:46 PM IST


