Last Updated:
தீபாவளி பண்டிகை எதிரொலியாக தெடாவூர் ஆட்டுச் சந்தையில் ரூபாய் 3 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது. பண்டிகை என்பதால் கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானது. ஆடுகளை போட்டி போட்டு மக்கள் வாங்கி சென்றனர்.
சேலம் மாவட்டத்தில் தெடாவூர், கொளத்தூர், வீரகனூர், மேச்சேரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் பெருமளவில் ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தை வாரத்தில் சனி மற்றும் புதன், வெள்ளி போன்ற நாட்களில் நடைபெற்று வருகின்றது. பெரும்பாலும் திருவிழா காலங்களில் இங்கு விற்பனை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும். அதுபோல தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம், கங்கவள்ளி அருகில் உள்ள தெடாவூரில் கூடிய கால்நடை சந்தையில் ரூபாய் 3 கோடியே 5 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. தற்போது, புரட்டாசி மாதம் நிறைவடைந்துள்ளது என்பதால் மக்கள் அதிக அளவில் கறிக்கடையில் குவிந்து வருகின்றனர்.
இந்த வார சந்தைக்கு மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் தெடாவூர், தேவூர், வீரகனூர், அரசிராமணி, நங்கவள்ளி, பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. விற்பனையும் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
மேலும், சேலம் தெடாவூர் ஆட்டுச் சந்தைக்கு, சேலம் மாவட்டம் மட்டுமின்றி தெடாவூர் ஆட்டுச் சந்தைக்கு வரும் ஆடுகள் பெரும்பாலும் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் மேச்சேரி இன ஆடுகள் போன்ற பல்வேறு இன ஆடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த ஆடுகள், உள்ளூர் வியாபாரிகளால் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. பெரும்பாலும், திருவிழா காலங்களில் வழக்கத்தை காட்டிலும் விற்பனை அதிகமாக இருக்கும். அதேபோல, கொளத்தூர் ஆட்டுச் சந்தையிலும் ரூபாய் ஒரு கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Salem,Salem,Tamil Nadu
October 19, 2025 11:27 AM IST


